Thursday, April 29, 2010

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்


தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரிய (பெருவுடையார்) கோவில் உலக பிரசித்தி பெற்ற ஆச்சரியமான கட்டிட வேலைப்பாடு கொண்ட இந்து ஆலயம். இது சோழ  பேரரசன் இராஜராஜ சோழன் தஞ்சாவூரை ஆட்சிசெய்த 10ம்-11ம் நூற்றாண்டில்(கி.பி) கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் மூலமாக அறியப்படுகின்றது.

இக் கோயிலின் பலவிடங்களிலும் கல்வெட்டுக்கள் (வெளிச்சுவர், பிரகாரச்சுவர்) சிற்பங்கள தென்படுவதாகவும், இவை அனைத்தும் இராஜராஜ சோழன் காலத்தவை எனவும் இவற்றில் 107 பந்திகளில் கல்வெட்டு வசனங்கள் , 108 சிவதாண்டவ வடிவங்கள் இத்துடன் சமய நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறு என பல விசயங்கள் காணப்படுகின்றன.
மேலும் , இந்த கோவிலின் வெளிச்சுவருக்கு வெளியே கோட்டை போன்ற அமைப்பும் , அகழி போன்ற வாய்க்காலும் காணப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. அத்துடன் இந்த ஆலயத்தின் பெருவுடையார் (மிகப்பெரிய சிவலிங்கம்) , நந்தி , பெருவுடையார் சன்னிதியின் மேல் கலசம் , கலசம் இருக்கும் பெரிய விமானம் ஒவ்வொன்றும் தனியான ஒரு கல்லில் செதுக்கப்பட்டுள்ள விடையம் இந்த ஆலயத்தின் அழியாத புகழுக்கு காரணமாவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த ஆலயத்தில் குறிப்பிடும் படியான தகவல்கள்.


•இந்த ஆலய கட்டிட வேலைகள் 1003 ம் ஆண்டு தொடங்கி 7 வருடங்களில் முடிவுற்றதாக குறிபிடப்படுகின்றது.

•முதன்மையான கோபுரத்தின் உயரம் 215 அடி (65 மீற்றர்) என கணக்கிடப் பட்டுள்ளது. இது கருவரையின் மேலே 96 அடி சதுரமான அடித்தளத்தின் மேல் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. கருவறையினமீதகட்டிய இந்த மிகப்பெரிய விமானமே இக்கோயிலின பெரும சிறப்பாகபோற்றப்படுகிறது.

•கோபுரத்தின் நிழல் எக்காலத்திலும் நிலத்தில் படாத வண்ணம் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்தில் மட்டும் சூரிய வெளிச்சம் படும் அற்புதமான கட்டிட கலையால் உருவாக்கப்பட்டது.

•இந்த ஆலயத்தின் கருவறையில் அமைந்துள்ள ஆவுடையார் எனும் மூல லிங்கம் விசேட ரகத்தில் அமைந்த தனியான கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 23 அடி , சுற்றளவு 54 அடி உடையதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

•கோவிலின் முன் அமர்ந்த கோலத்தில் உள்ள தனி கல்லில் செதுக்கிய நந்தி 25 டன்  எடை , 12 அடி உயரம் , 8 அடி அகலம், 20 அடி நீளமும் உடையது.

•கோபுரத்தின் உச்சியில் (விமானத்தில்) உள்ள எண்கோண கலசம் 3.8 மீற்றர் உயரமும் 81 டன் எடை ( 15 யானைகள் எடை) உடைய தனியான 25 அடி சதுர கல்லில் செதுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு மூலைக்கு இரண்டு நந்திகளாக எட்டு நந்திகள் இந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

•மேல் சொல்லப்பட்ட கலசத்தினை செய்வதற்கு வேண்டிய அந்த கல்லை அக்காலத்தில் 6 கிலோமீற்றர் தூரத்தில் இருந்து கொண்டு வந்த மகா திறமை இன்றும் புரியாத புதிராக உலகில் பலராலும் பேசப்படுகின்றது.

•தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு இந்தியாவின் பல பகுதியிலும் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களின் மொத்த அளவானது ஜீசா பிரமிட்டு கட்டுவதற்கு பயன் படுத்தியதை விடவும் அதிகம் என ஆராச்சி செய்வோர் கணக்கிட்டுள்ளனர்.

•இந்த ஆலயத்தின் சுற்று சுவர்கள் அடங்கலான பகுதிக்குள் 200 தாஜ் மஹால்களை அடைக்கும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக விரிந்து பரந்துள்ளதாக வியந்த பேசப்படுகின்றது.

•தமிழர்களின் கலை, கலாச்சாரம், கற்பனைத் திறன், சிற்பத் திறன் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள தஞ்சை பெரிய கோயிலானது தமிழர்களின் ஆட்சி , அறம் இவற்றுடன் ஆன்மீகப் பணிக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

•இராஜ ராஜ பேரரசர் கோவில் திருப்பணியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இவரது ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாகவும் சுபீட்சமாகவும் வாழ்ந்தனர் எனவும் சொல்லப்படுகின்றது. மக்களுக்காக உயர் கல்விக்கூடங்கள், அருட்சாலைகள், அறச்சாலைகள் போன்ற பொது நற்பணி மன்றங்களையும் மன்னர் நிறுவியிருந்ததாக வரலாறு குறிப்பிடுகின்றது.

•இந்த ஆலயத்தின்வெளியே சோள பேரரசன் இராஜராஜனின சிலை அமைக்கப்பட்டுள்ளது.

•இந்தக் கோவில் தற்போது மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை வசம் இருந்துவருகின்றது.

•இந்த ஆலயம் (பிரகதீஸ்வரர்) UNESCO இனால் உலக கலாச்சார சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Lost Temples of India : BBC

No comments:

Post a Comment